TRV Bible
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™

Strong’s Greek / Hebrew Tamil Dictionary
கிரேக்க / எபிரேய தமிழ் அகராதி

G (Greek) / H (Hebrew) எழுத்துடன் சேர்த்து Strongs இலக்கத்தை உட்புகுத்தவும். Eg : G2 or H2

இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™

Download the Biblica Tamil Sri Lankan Bible App

Read on

இலகு தமிழ் மொழிபெயர்ப்பின் சிறப்பம்சங்கள்
  • வேதாகம எழுத்தாளர்களின் கருத்துக்களையும், எழுதப்பட்ட காலத்தில் வாசகர்கள் விளங்கிக்கொண்ட பொருளையும் அவதானத்தில் கொண்டு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
  • தற்கால மற்றும் மரபுவழி சொற்களைப் பயன்படுத்திஎவரும் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது.
  • எபிரேயகிரேக்க மூலப்பிரதிகளின் அர்த்தத்தை மிகத் துல்லியமாகப் பிரதிபலிக்கிறது.
  • பொருளைத் தெளிவுபடுத்துவதற்கும், சாத்தியமான மாற்று மொழிபெயர்ப்புகளை அறிந்துகொள்வதற்கும் அடிக்குறிப்புகள் உள்ளன.

இலகு தமிழ் மொழிபெயர்ப்பு, வேதாகமத்தைத் தங்கள் தாய்மொழியில் படிக்கவும், கேட்கவும், இலகுவாக புரிந்துகொள்ளவும் விரும்பும் அனைவருக்கும் அதிக பயனுள்ளதாக இருக்கும்.

About IBS Lanka

Serving Christians and the community in Sri Lanka, IBS Lanka has brought the Bible to thousands in Sinhala and Tamil languages for over 35 years. We have collaborated with Biblica Inc. for over 20 years to ensure accurate and accessible translations. Explore the Bible in a clearly understandable language today!

இலங்கை கிறிஸ்தவர்களதும் சமூகத்தினதும் நன்மை கருதி பணியாற்றுகின்ற IBS Lanka (IBSL), 35 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் ஆயிரக்கணக்கானோருக்கு வேதாகமத்தை வழங்கி வருகின்றது. துல்லியமான மற்றும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய மொழிபெயர்ப்புகளை உறுதி செய்ய, நாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பிப்ளிகா இன்க் (Biblica Inc.) உடன் இணைந்து பணியாற்றுகிறோம். தெளிவாகவும், எளிதாகவும் புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் இன்றே வேதாகமத்தை கற்றுக்கொள்ளுங்கள்!

About Biblica Inc.

பிப்ளிகா: “அனைவருக்கும் இறைவனின் வார்த்தை”

பிப்ளிகா, உலகின் மிகப்பெரிய சர்வதேச வேதாகம சங்கமாகும். இது, கடந்த இருநூறு வருடகாலமாக பரிசுத்த வேதாகமத்தை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து, உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு வழங்குகிறது.

பிப்ளிகாவின் முக்கிய நோக்கம், இறைவனின் வார்த்தையை அனைவரும் அணுகக்கூடியதாக வெளியிடுவதாகும். இதன் மூலம், மக்களின் ஆன்மீக வளர்ச்சிக்கு உதவவும், அவர்களின் வாழ்க்கை ஆசீர்வாதமானதாக மாற உதவவும் விரும்புகிறது.

பிப்ளிகாவின் பணிகள் பின்வருமாறு:

  • பரிசுத்த வேதாகமத்தை மொழிபெயர்த்தல்
  • பரிசுத்த வேதாகம வெளியீடுகள்
  • வேதாகமத்தை கற்பிக்கும் பணி

 

பிப்ளிகாவின் பணி, ஆபிரிக்கா, ஆசியா பசிபிக், ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு, வட அமெரிக்கா மற்றும் தெற்காசியா உள்ளிட்ட உலகின் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகின்றது.

https://www.biblica.com/about/

 

இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ வேதாகமத்தின் பின்னணி

பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc. 

  • 1985 ஆம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்டு, 2002 ஆம் ஆண்டுவரை இலங்கை திருச்சபை பிரதிநிதிகள் குழுவினால் மொழிபெயர்க்கப்பட்டது.
 
  • வேதாகமத்தின் உண்மையான கருத்தை அனைத்து மக்களும்  இலகுவாக புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டது.
 
  • பிப்ளிகாவின் (Biblica Inc) வழிகாட்டுதலின் கீழ் உருவாக்கப்பட்டது.
 
  • முதல் பதிப்பு 2002 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
 
  • தற்கால மற்றும் மரபுவழி சொற்களைப் பயன்படுத்தி எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது.
 
  • 2023 ஆம் ஆண்டு சீர்செய்யப்பட்டுமீள்புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
 
  • வேதாகமத்தின் எபிரேயகிரேக்க மூலப்பிரதிகளின் அர்த்தத்தை மிகத் துல்லியமாகப் பிரதிபலிக்கிறது.
 
  • மொழிநடை மேம்படுத்தப்பட்டுள்ளது.
 
  • வேதாகமத்தை தாய்மொழியில் படிக்ககேட்கபுரிந்துகொள்ள விரும்பும் அனைவருக்கும் அதிக பயனுள்ளதாகும்.
 
  • பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
 
  • அனுமதியுடன் வெளியிடுவோர் IBS Lanka, 120 A, Dharmapala Mawatha, Colombo 7.